ஆப்கானிஸ்தான் அருகே உள்ள மலைப்பாங்கான நாடு தஜிகிஸ்தான். இந்த நாட்டில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கசேத விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. கடநி்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 என பதிவாகி இருந்தது. அதில் 46 ஆயிரம் பேர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு ரிக்டர் அளவில் 6. 8 ஆக பதிவாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானிலும் அடுத்தடுத்து 4 முறை இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
.
ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் அருகே அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. தஜிகிஸ்தானில் ஏறபட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாகத்தான் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.