ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் எதுவும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.