கடந்த வெள்ளிக்கிழமை மியன்மர் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 3500 பேர் பலியானார்கள். அது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று காலை 11.22 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவானதாகதேசிய பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 17.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 75.21 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.