வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாமின் சோனித்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததை உணர முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
