இந்தியாவின் வடக்கு எல்லையாக உள்ள குட்டி நாடு திபெத். இங்குஇன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானதாக சீனா அறிவித்து உள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் நேபாளம், சீனா மற்றும் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக டில்லி, பீகார் போன்ற மாநிலங்களில் இது உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் திபெத்தில் 32க்கும் அதிகமான மக்கள் இறந்ததாகவும், கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் சீனா அறிவித்து உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு படையினர் விரைந்து உள்ளனர்.