தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இருந4்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முலுகு மாவட்டம். இந்த பகுதியில் இன்று காலை 7.27 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அருகில் உள்ள திருவூரு, ஜக்கையா பேட்டை, ஹைதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி, உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் நில நடுக்கம் ஏற்பட்டபோது ஆந்திராவிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.