கடந்த திங்கட்கிழமை அதிகாலை துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்து விட்டார்கள். இன்னும் அங்கு மீட்பு பணிகள் முடியவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. சேத விவரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.