சென்னை தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென பயங்கரமாக ஒரு சத்தம் கேட்டது. இதனால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தை விட்டு வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர். உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்தனர். 10 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஒரே ஒரு டைல்ஸ்
மட்டும் உடைந்து இருந்தது. இதனால் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கூறினர். ஆனாலும் 30 நிமிடம் ஊரியர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். அதன் பிறகே அவர்கள் வழக்கமான நிலைக்கு வந்தனர்.