பசிபிக் பெருங்கடலில், நியூசிலாந்து வடக்கு தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல் மைல் தூரத்தில் உள்ளது பிஜி தீவு. இந்த பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.