சென்னை அண்ணாசாலை, சென்னையின் அடையாளங்களுள்ஒன்று. சென்னையை காட்டவேண்டும்என்றால் ஒருகாலத்தில்அண்ணாசாலை எல்.ஐ.சி.கட்டிடத்தை தான் காட்டுவார்கள்.இந்த சாலை வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகும்.இன்று மதியம் திடீரென அண்ணாசாலையில் நிர அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நில அதிர்வு காரணமாக கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த ஊழியர்கள் வெளியே ஓடிவந்தனர்.
சிலர் மெட்ரோ ரயில்வேக்கான பணி நடப்பதால்அதுநில அதிர்வு போல உணரப்பட்டிருக்கலாம் எனதெரிவித்தனர்.அதே நேரத்தில்அண்ணாசாலையில் எந்த விதபணிகளும்மேற்கொள்ளப்படவில்லை என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.எனவே சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டதா என்பதை அறியும் பணி நடக்கிறது. நில அதிர்வு செய்தியால் சென்னையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.