மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு பட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய 2 பயணிகள் மீது கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த 2 பயணிகளை மட்டும் தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் இ சிகரெட்டுகளை கடத்தி் வந்தி்ருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் 1285 இ- சிகரெட்டுகளை இருந்தது. அவற்றை பறி்முதல் செய்தனர். இந்த வகையான சிகரெட் இந்தியாவில் தடை செய்யப்பட்டவையாகும். இதன் மதிப்பு ரூ.32.12 லட்சம் ஆகும். இது தொடர்பாக அந்த பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.