Skip to content

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த பத்தாம் தேதி விமர்சியாக நடைபெற்றது. தற்போது மண்டல அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தஞ்சை வந்த துர்கா ஸ்டாலின் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தார். முன்னதாக கோயில் வந்த துர்காசாலினுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அரை மணி நேர வழிபாட்டிற்கு பிறகு

திருவாரூர் புறப்பட்டு சென்றார். மாரியம்மன் கோவில் வருவதற்கு முன்னதாக திருச்சியில் இருந்து நேரடியாக திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார் அப்போது அவருக்கு பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. இவருடன் தஞ்சை
தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதிசட்டமன்ற உறுப்பினர் டீகேஜி நீலமேகம் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி உள்ளிட்டோர் இருந்தனர்.

error: Content is protected !!