திருச்சி மாவட்டம் துறையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் வசிப்பவர் தியாகராஜன் பானுமதி தம்பதியினர் இவர்களுக்கு கோபி ஸ்ரீ என்ற 13 வயது மகன் உள்ளார் இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்
தந்தை தியாகராஜன் வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் நிலையில் தாய் பானுமதி உடன் கோபி ஸ்ரீ இருந்து வருகிறான் சம்பவத்தன்று மாணவன் கோபி ஸ்ரீ வெளியே விளையாட சென்று வருவதாக தாயிடம் கூறி சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்ப இல்லை . இதனால் தாய் பானுமதி கணவர் தியாகராஜனுக்கு தகவல் அளித்ததோடு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடத் தொடங்கியுள்ளார், கோபி ஸ்ரீ எங்கும் கிடைக்காத நிலையில் தாய் பானுமதி துறையூர் காவல் நிலையத்தில் தன் மகனைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறக்க சில தினங்களில் உள்ள நிலையில் மாணவன் மாயமானது குறித்து இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.