சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்வினையாற்றினார். இதனால் அவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அந்த படிப்பிடிப்புக்காக இன்று அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது ரஜினி கூறியதாவது:
துரைமுருகன் என் நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. எங்கள் நட்பு தொடரும். கொடி அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.