மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை கழக செயலாளர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ எம்பியின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே எஸ் தமிழ்செல்வன் ஏற்பாட்டில் பல்லடம் அருள்புரம் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அவர்களின் நலன் கருதி 75 நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான உயிர் காக்கும் விபத்து காப்பீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அருள்புரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடந்த வருடம் ஏற்பட்ட சாலை விபத்தில் அருள்புரம் மதிமுக தோழரின் மகனுக்கு செயற்கை கால் பொருத்த மாவட்ட
இளைஞர் அணி அமைப்பாளர் கே எஸ் தமிழ்ச்செல்வன் சார்பில் ரூபாய் 70,000 க்கான காசோலையை கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் வழங்கினார். மேலும் கூடுதல் சிறப்பாக அவைத்தலைவர் அவர்கள் தன்னுடைய பங்காக ரூபாய் 25000 வழங்கினார். ஆகமொத்தம் கழகத் தோழரின் மகனுடைய செயற்கை கால் பொருத்த ரூபாய் 95,000 இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்டத்தினுடைய செயலாளர் அண்ணன் புத்தரச்சல் பி கே மணி அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்
திருப்பூர் மாநகர் மாவட்டத்தினுடைய செயலாளர் சமத்துவ பொங்கல் விழா நாயகன் அரிமா ஆர் நாகராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி துணைச் செயலாளர் ஆர் ரத்னசாமி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் ஒன்றிய கழகச் செயலாளர் மு. சுப்பிரமணியம் அவர்கள் மற்றும் பல நகரக் கழகச் செயலாளர் வைகோ பாலு அவர்கள் உரையாற்றினார்கள்.
திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ப பாலகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார். இந்த மாபெரும் நிகழ்வுகளில் மாநில மாவட்ட கழக நிர்வாகிகள் , திருப்பூர் மாநகர மாவட்ட பொருளாளர் மணி (எ) சண்முகசுந்தரம் அவர்கள், திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரத்தினசாமி அவர்கள், திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பூமலூர் சாமிநாதன் அவர்கள், திருப்பூர் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் தாமோதரன் அவர்கள், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் செயலாளர் அவிநாசி பெருமாள் அவர்கள், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் P M சுப்பிரமணியன் அவர்கள், அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு ( எ) கோவிந்தராஜ் அவர்கள், திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இடுவாய் சு சிவக்குமார் அவர்கள், காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் MBS தாமரைக் கண்ணன் அவர்கள் , குண்டடம் ஒன்றிய செயலாளர் கு செந்தில்நாதன் அவர்கள், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரகு அவர்கள், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் பிரபாகரன் அவர்கள், பல்லடம் துணைச் செயலாளர் ஆறுச்சாமி அவர்கள், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சதீஷ்குமார் அவர்கள், பல்லடம் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் அவர்கள், அருள்புரம் பகுதி மூத்த முன்னோடி ஆனந்தன் அவர்கள், ஜான், நந்தகோபால், மகேஸ்வரன், ஆனந்த், பரத், உப்பிலிபாளையம் கணேஷ், ராஜேந்திரன், ஆட்டோ கௌரி, ஆட்டோ கண்ணன் , உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.