அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக மாநாடு மதுரையில் நடந்தது. கடந்த மாதம் அதிமுக மாநாடு நடந்த வலையங்குளம் மைதானத்திலயே இந்த மாநாடும் நடந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதுமிருந்து மதிமுக தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.
தமிழ்ச் சமுதாயத்துக்காக கடந்த 60 ஆண்டுகளாக பெரியார், அண்ணா வழியில் உழைத்துவருகிறார் தலைவர் வைகோ. அவர் மீதான உங்கள் அன்புக்கு ஈடில்லை.
தமிழ்நாட்டு அரசியலில் இதுவரை இல்லாத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டும் வகையில், `மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தைத் தயாரித்தேன். அது உலகில் பல இடங்களில் பார்க்கப்பட்டுவருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தலைவருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர், சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் தவறான தகவல்களைப் பரப்பினார்கள். அதையெல்லாம் தாங்கினேன்.
ஒருமுறை மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள வாஜ்பாய், அத்வானி ஆகியோர் வற்புறுத்தியபோதும் அதை ஏற்க மறுத்தவர். ஆனாலும் கட்சிக்குள் ஒரு குள்ளநரிக் கூட்டம் சதி செய்துகொண்டிருந்தது.
எனக்கு இந்த இயக்கம் கொடுத்த பதவிகூடத் தேவையிலை. தொண்டர் என்ற அடையாளம் போதும். நான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையில், எனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. நான் என்றும் கட்சியிலுள்ள மற்ற நிர்வாகிகள் வெற்றி பெறவே உழைப்பேன்” என்றார்.