இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரைவைகோ
திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள் வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….
இதுவரை நடைபெற்ற பிரச்சாரத்தின் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு
கண்டிப்பா , என்னுடையது இல்லை தமிழக முதலமைச்சரின் சாதனைகள் அதனால் கண்டிப்பாக அதன் பலன் எங்களுக்கு கிடைக்கும்.
இந்த மக்களவைத் தேர்தல் இந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் மக்கள் நல அரசியலா, மதவாத அரசியலா, ஜனநாயகமா அல்லது பாசிசமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல் .
பிரச்சாரத்தில் எங்களுக்கு கொடுத்த வரவேற்பு ஒரு நம்பிக்கை கொடுத்துள்ளது.
இந்த திருச்சி தொகுதியில் மட்டுமல்ல புதுவை உட்பட 40தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடலின் அரசியல் சாதனைகளுக்கு மகுடம் சூட்டு விதமாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும் என்று நம்புகிறேன்.
ஜூன் 04 தேர்தல் முடிவு வரும் நாள் அன்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 101வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சருக்கு பரிசாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும் என 100% நம்புகிறோம்.
மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மதிமுக சார்பில் ரூபாய் 250 ஓட்டுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு
அவர் யார் என்று தெரியாது?
அவர் சட்டப்படி எது வேண்டாம் செய்து கொள்ளலாம். இது போன்ற தகவல் எனக்கு இல்லை. எனவே அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது யூகமாக எனக்கும் சொல்ல முடியாது
வாக்குப்பதிவு அதிகமாக இருந்தால் அது இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்விக்கு
எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வாக்குப்பதிவு இருக்கிறதோ அது எங்களுக்கு சாதகமாக அமையும் கடந்த மூன்று வருடங்களாக நமது தமிழக முதல்வர் நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடி நிலையிலும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.
இந்த பிரச்சாரத்தில் ஒன்றிய அரசு மாற்றம் வந்து ராகுல் காந்தி பிரதமர் பதவி இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டுக்கு உரிய நிதி கிடைக்கும் போது கூடுதலாக நமது தமிழக அரசு செய்ய முடியும் என கூறி வந்தோம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகமா இருக்கும் என்று தான் எதிர்பார்க்கிறோம்.