கரூர் ரயில் நிலையத்தில் அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பார்வையிட்டு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய நுழைவு வாயில், நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்துமிடம், பயணிகள்
காத்திருக்கும் அறை, லிஃப்ட் வசதி ஆகியவை மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஃபெங்கல் புயலின் வேகம் அதிகமானால், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்களின் நேரம் மாற்றம், ரத்து செய்யும் நடைமுறைகள் பின்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்