கார் பந்தயத்திற்காக அஜித் குமார் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார். நீண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த கடினமான முடிவை அஜித் எடுத்திருப்பதாக அவரது கார் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அஜித்தின் கார் ரேஸிங் நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
துபாய் 24 மணி நேர கார் ரேஸ் போட்டிக்காக அஜித் குமார் பயிற்சி மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அஜித் குமார் கார் ரேஸிங் கமிட்டி ஆய்வு மேற்கொண்டது.
24 மணி நேர கார் ரேஸ் மிகுந்த சவாலானது. இதனை வெற்றிகரமாக முடிப்பதற்கு Endurance எனப்படும் அதீதமான தாங்கும் திறன் அவசியம். நிறுவனத்தி உரிமையாளராகவும், ரேஸ் குழுவில் உறுப்பினராக இருக்கு அஜித் குமாரின் உடல் நலம் மற்றும் அணியின் வெற்றி உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதற்காக வியூகங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 24 மணிநேர கார் ஓட்டும் போட்டியில் இருந்து அஜித் குமார் விலகுகிறார்.
முன்மாதிரி விளையாட்டு வீரராக அஜித் குமார் இந்த முடிவை எடுத்திருக்கிறார். மிகவும் பிரபலமாகவும், அதிகமான ரசிகர்களை பெற்றவருமான அஜித் குமாரின் கார் ரேஸ் கெரியர் இத்துடன் முடிந்து விடவில்லை.அவர் துபாய் 24 மணி நேர கார் ரேஸ் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார். அஜித் குமார் ரேஸிங் என்பதன் உரிமையாளராகவும், போர்ச் கேமென் ஜிடி4 Porshce Cayman GT4 என்ற காரின் டிரைவர்களில் ஒருவராகவும் உள்ளார்.