திருச்சி நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி முத்தரசுவின் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அது போல முத்தரசுவின் தாயார் வீட்டிலும் அதே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முத்தரசுவின் தாயார் வீடு தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆர்எம்எஸ் காலனியில் உள்ளது. அந்த வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, திருச்சியில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் 9.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. போலீசார் என்ன கைப்பற்றினார்கள் என்பது தெரியவில்லை.
திருச்சி டிஎஸ்பி முத்தரசுவின் தாயார் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு
- by Authour
