சென்னையில் அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிறுவன முக்கிய இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் டிஎஸ்பி கபிலன் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி,ஜி.பி. தினேஷ் மோடாக் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.