Skip to content

போலீஸ் ஸ்டேசனில் இளம்பெண்ணுடன் உல்லாசம்….. டிஎஸ்பி கைது..

  • by Authour

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக(டிஎஸ்பி) பணியாற்றி வருபவா் ராமசந்திரப்பா (50). இவர் மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பெண்ணை தன்னுடைய அறையில் இருந்து அலுவலகத்தின் கழிவறைக்கு அழைத்து செல்லும் ராமசந்திரப்பா, இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ பதிவாகி உள்ளது.

இளம்பெண்ணுடன் ராமசந்திரப்பா நெருக்கமாக இருப்பதை ஜன்னல் வழியே யாரோ செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். செல்போனில் பதிவு செய்யப்படுவதை திடீரென அந்த பெண்ணும் பார்த்து விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிரது.

அந்த பெண் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர். தன்னுடைய நிலப்பிரச்சினை தொடர்பாக மதுகிரி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க அந்த பெண் வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்திய ராமசந்திரப்பா காவல் நிலையத்தில் வைத்தே அவருடன் காமகளியாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

சிசிடிவி டிஎஸ்பி

இது தொடர்பாக அந்த பெண் தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் பெண்ணுடன் ராமசந்திரப்பா ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் வைத்து பெண்ணுடன் நெருக்கமாக இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) ராமசந்திரப்பா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மதுகிரி போலீசார் பலாத்கார வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!