திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷன் சிக்னலில் இன்று திடீரென ஒரு நபர் அரை நிர்வாணத்துடன் வந்து பெட்ஷீட்டை விரித்து நடுரோட்டில் படுத்துக்கொண்டார். இதனை கண்டு திகைத்த போக்குவரத்து போலீசார் அவரிடம் சென்று எழுந்து வருமாறு கூறினர். ஆனால் அவரோ…..
இன்ஸ்பெக்டர் இங்க வரவேண்டும் என்று ஆரம்பித்தார். சார்….அதெல்லாம் பேசிகலாம் வாங்க என்று போக்குவரத்து போலீசார் அவரை எழுப்ப அவரோ அடுத்ததாக கமிஷனர் இங்கு வரவேண்டும் என்றார். அதன் பின்னர் கையைபிடித்த போலீசார் அவரை அகற்ற முயன்றனர். அப்போது அவர்…. என் நியாயத்தை கேட்க டிஜிபி சைலேந்திரபாபு வரவேண்டும் என்ற போதுதான் போலீசாருக்கு தொிந்தது அவர் போதையில் இருக்கிறார் என்று. இதற்கு மேல் தாங்காது என்று எண்ணிய போக்குவரத்து போலீசார் நைசாக பேசி கையை பிடித்து துாக்கி அங்கிருந்து அகற்றினர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.