Skip to content

டூவீலருடன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி… பரபரப்பு…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை செல்லும் சாலையில் தொலைக்காட்சி டிஷ் கடை வைத்து நடத்தி வருபவர் சரத்குமார்.. இவரது கடை முன் வந்து நின்ற காரமடை பகுதியை சேர்ந்த சந்தான வடிவேல் என்பவர் மது போதையில் இருந்து உள்ளார்.. போதையில் வாகனத்தை இயக்கி அங்கிருந்து புறப்பட முயன்ற போது அவரது கட்டுப்பாட்டை இழந்து சரத்குமாரின் கடை மீது மோதி விபத்து ஏற்பட்டது.. இதில் கடை முன் இருந்த கண்ணாடி முழுவதுமாக சேதம் அடைந்தது..இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.