எந்த பொருள் கையில் கிடைத்தாலும் தாளம் தட்டி அசத்தும் திறமை கொண்ட டிரம்ஸ் சிவமணி நடந்துகொண்டிருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவில் பங்கேற்க வருகைதந்துள்ளார். பேராலயம் வந்த டிரம்ஸ் சிவமணி வேளாங்கன்னி அருகே உள்ள தெற்குபொய்கைநல்லூர் பகுதியில் உள்ள உதவிகரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்திற்கு திடிர் என வருகைதந்தார். ஆதரவற்ற குழந்தைகளோடு உரையாடிய அவர்
குழந்தைகளை மகிழ்விக்க சுமார் ஒரு மணிநேரம் மரப்பெட்டியில் தாளம்தட்டி அசத்தினார். அப்போது யாருக்கு மேளம் அடிக்க தெரியும் என்று டிரம்ஸ் சிவமணி கேட்க ஆர்வத்துடன் அங்கிருந்த சிறுவன் ராகுல் மேளம் அடித்து மகிழ்ந்தான். கூண்டு கிளிகள் போல அடைந்து கிடந்த குழந்தைகள் டிரம்ஸ் சிவமணியின் தாளத்தை கேட்டு ரசித்து குதூகலம் அடைந்தனர்.