திருச்சி கேகே நகர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ரேஸ் கோர்ஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். . அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அவரை அழைத்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.
இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது
திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் சிபிராஜ் (19)என்பது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது சிபிராஜ் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது கூரியர் மூலம் போதை மாத்திரை வந்ததாக கூறினார்.
இதையடுத்து அவரிடம் இருந்த போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து சிபிராஜை கைது செய்துள்ளனர்.