Skip to content

ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்…. அதிரடி…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தற்கொலை

திருச்சி துவாக்குடி விஓசி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 26) இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்க்கும் இடத்தில் தான் சம்பாதித்த பணத்தை இழந்து உள்ளார். பின்னர் அவர் சொந்த ஊருக்கு வந்து தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார். இந்த நிலையில் சம்பவத்தன்று தான் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து,உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மனைவியுடன் தகராறு; வாலிபர் தற்கொலை

திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 26) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த கங்காதேவி (வயது 57)என்ற பெண் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.
இதேபோல் கே.கே. நகர் எல்.ஐ.சி காலனி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக கே. சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (37), கே.கே. நகர் உடையான் பட்டி சாலை பகுதியைச் சேர்ந்த முகமது மைதீன் ஆகிய இரண்டு பேரை கே.கே. நகர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் உறையூர் ராமலிங்க நகர் குழுமாயி அம்மன் கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகர் (43) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 2 செல்போன்கள் பறிமுதல்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் நேற்று கே.கே. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது சிறப்பு முகாம் வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து கே.கே.நகர் போலீசார் இந்த செல்போன்கள் யாருடையது? யார் பயன்படுத்தினர்? எப்படி சிறப்பு முகாமில் வந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!