அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தூத்தூர்
தங்க.தர்மராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மாவட்டத்தில்
பருவமழை பொய்த்து விட்டது புள்ளம்பாடி வாய்க்கால்
பொன்னாறு வாய்க்கால் முற்றிலும் தண்ணீர் வராததால் டெல்டா பகுகுதிகள் உள்ளிட்ட
மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே அரியலூர் மாவட்டத்தை முற்றிலும் வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்கவேண்டும். மாவட்டத்தில் உள்ள வரத்து பாசன வடிகால் வாய்க்கால் அனைத்தும் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு தரமாக தூர் வாரவேண்டும்.
மருதையாறு என்ற காட்டாற்று வெள்ளம் கொள்ளிடம் ஆற்றின் கலக்கும் முகத்துவாரத்தில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர் வாரி இரண்டு பக்கமும் கரைகளை உயர்த்த வேண்டும். சுக்கிரன் ஏரியின் பாசன பகுதியான சிலுப்பனூர்
நானாங்கூர் ஓரியூர் ஆதனூர் கோமான் ஆகிய கிராமங்களை டெல்டா பகுதியில் சேர்க்கவேண்டும். அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரசு அறிவித்த கதவணை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.