ஒரு மாவட்டத்தின் உயர்ந்த பதவி என்பது கலெக்டர் பதவி. அதற்கு அடுத்த நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி (Dist.Revenue Officer)இருப்பார். கலெக்டர் விடுப்பில் இருந்தால் கலெக்டர் பொறுப்பையும் சேர்த்து பார்ப்பவர் டிஆர்ஓ.
மயிலாடுதுறையில் டிஆர்ஓவாக இருந்தவர் மணிமேகலை. இவர் பொதுமக்கள் மத்தியிலும், அரசு அலுவலர்கள் மத்தியிலும் நல்ல பெயரெடுத்தவர். இவர் திடீரென சென்னைக்கு மாற்றப்பட்டார். பின்தங்கிய நிலையில், வளரும் நிலையில் உள்ள மயிலாடுதுறை போன்ற மாவட்டத்துக்கு மணிமேகலை போன்ற அதிகாரிகள் அவசியம் தேவை. அவரை ஏன் மாற்றினார்கள் என மயிலாடுதுறை மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். சில உயா் அதிகாரிகள் தான் தங்கள் சுய லாபத்துக்காக மணிமேகலையை மாற்றிவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் மயிலாடுதுறைஅதிகாரிகள், மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஏற்கனவே இதேபோல் இருந்த டிஆர்ஓ திடீரென மாற்றப்பட்டார். தற்போது அதிகாரி மணி மேகலை , மயிலாடுதுறையில் டிஆர்ஓ பணியிடம் தொடர்ந்தே காலியாக உள்ள நிலை தொடர்கிறது..
தற்போது டிஆர்ஓவின் பணிகளையும் சேர்த்து கலெக்டரே பாா்ப்பதால் அவருக்கு பணிச்சுமை அதிகமாகிறது. ஏற்கனவே அவர் இருதய ஆபரேசன் செய்தவர். எனவே உடனடியாக மணிமேகலை அல்லது மணிமேகலை போன்ற ஒரு சுறுசுறுப்பான அதிகாரியை மயிலாடுதுறைக்கு நியமிக்க வேண்டும் என அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.