நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் நேற்று இரவு 11.30 மணிக்கு கார் ஓட்டி பயிற்சி பெற்றனர். இருவரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் காரை ஓட்டிச்சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மீது மோதிவிட்டனர். இதில் இவர்கள் சென்ற கார் நொறுங்கியது. காரில் இருந்த 2 சிறுவர்களும் பலியானார்கள். இது குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
நாமக்கல்….. கார் ஓட்டி பழகிய 2 சிறுவர்கள் பலி….. எதிரே வந்த காரில் மோதினர்
- by Authour
