திருச்சி பிராட்டியூர் பகுதியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து ஆய்வாளர் இல்லாததால் வாகனத்தை புதுப்பித்தல், உரிமம் பெறுதல், லைசென்ஸ் பெறுதல், வாகனங்களுக்கு எப்சி வாங்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளும் வீணாகியுள்ளது. இதனால்
டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் மட்டுமல்ல, சாதாரண பொது மக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.