Skip to content

கோவையில் ஓட்டுனர் தினம் அனுசரிப்பு …. இருசக்கர வாகன பேரணி…

  • by Authour

உலகெங்கும் உள்ள ஓட்டுநர்களை போற்றும் விதமாக இன்று ஓட்டுநர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இருசக்கர வாகன பேரணி , மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமையக வளாகத்தில் பேரணி நிறைவு பெற்றது. இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக் குமார் பாடி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, 20 ஆண்டு காலமாக விபத்து ஏற்படுத்தாமல் பேருந்து இயக்கிய அரசு போக்குவரத்து கழக ஊழியர் தங்கசாமி..

தான் 1990 களில் ஓட்டுனராக பணிக்கு சேர்ந்தேன். 34 ஆண்டுகளாக தொடர்ந்து பணி செய்து வருகிறேன், இன்னும் 15 மாதங்களில் தான் ஓய்வு பெற

போகிறேன். நாம் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால், பொறுமை மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கண்டிப்பாக வேண்டும். இவை இரண்டும் இறந்தாலே எந்த விதமான விபத்தும் இல்லாமல் வாகனத்தை ஓட்ட முடியும். நான் உடன் பணி புரியும் ஓட்டுனர்களுக்கும் இதையே தான் கூறுவேன்.

பேருந்து பயணிகளிடம் ஓட்டுனர் மற்றும் நடத்தினர் தகாத வார்த்தைகள் கூறி திட்டுவதாக புகார்கள் எழுகிறதே என செய்தியாளர் கேள்விக்கு,

தான் இயக்கிய பேருந்துகளில் நடத்துணருடன், பயணிகளுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக சென்று நான் தீர்த்து வைப்பேன்.. என்னுடைய சர்வீசில் நான் இதுவரை எந்த பயணிகளிடமும், மற்றவர்களிடமும் சண்டையிட்டது இல்லை. யாராவது ஏதாவது கூறினால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும் என்றார். மேலும் தற்பொழுது முன்பை விட பேருந்து ஓட்டுனர்களுக்கு சிரமங்கள் அதிகமாகவே இருப்பதாகவும், அனைத்தையும் அனுசரித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்று கூறினார்.