Skip to content

சுவற்றில் ஆம்னி வேன் மோதி டிரைவர் பலி.. கோவையில் அதிர்ச்சி…சிசிடிவி

கோவை, சின்னதடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் 55 வயதான செல்வராஜ். இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பன்னிமடையில் இருந்து தடாகம் நோக்கி வந்து கொண்டு இருந்த போது வரப்பாளையம் பிரிவு அருகே ஆம்னி வேன் இவரது கட்டுப்பாட்டை விலகி அருகில் இருந்த சுவற்றில் வேகமாக மோதி நின்றது. இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாய்பாபா காலனி உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தடாகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவரது ஆம்னி வேன் நிலை தடுமாறி சுவற்றில் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!