திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதகாக கட்டப்பட்ட மிளகுப்பாறை மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு புதிய இணைப்பு வழங்கப்படுவதால் இப்பணியை 12.12.2022 அன்று மேற்கொள்ளப்பட உள்ளதால் பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர் புதியது, காஜாப்பேட்டை புதியது, காஜாப்பேட்டை பழையது, கண்டோன்மெண்ட் புதியது, கண்டோன்மெண்ட் பழையது, ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருலை, தெற்கு ராமலிங்க நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிக 14 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு13.12.2022 குடிநீர் விநியோகம் இருக்காது. 14.12.2022 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் இருக்கும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

