திருச்சி, கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, சாலை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி அப்பகுதி பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆயினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கெடுக்கப்படாத நிலையில் தற்போது திடீரென நூற்றுக்கு மேற்பட்டோர் திருச்சி – கரூர் முதன்மை சாலையில் திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் அனைவரும் அமைதியாக கலந்து சென்றனர்.