கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இம்முகாமில் குளித்தலை, கடவூர், கிருஷ்ணாபுரம்,கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து தண்ணீர் வீணாக வெளியே சென்று வருகின்றது . இதனை அங்கிருந்த பல்வேறு துறை அதிகாரிகளும் அந்த வழியாக சென்றபோதும் கண்டும் காணாதவாறு சென்றனர். இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் மக்கள் குறைந்திருக்கும் முகாமில் கலந்து கொண்ட நிலையில் ஒருவர் கூட குடிநீர் குழாய் உடைந்ததை சரி செய்ய கூற வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.