திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 37 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் சரிவர வருவதில்லை என்றும் அப்படியே வரும் தண்ணீரும் சுகாதாரம் இல்லாமல் வருவதாக கூறி பொதுமக்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 37வது வார்டுக்கு உட்பட்ட அம்மாக்குளம் பாரதியார் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் சரியாக வந்து கொண்டிருந்த நிலையில் கூடுதலாக ஒரு வால்வு அமைக்கப்பட்டது. புதிதாக கூடுதலாக வால்வு அமைக்கப்பட்டதால் தண்ணீர் அழுத்தம் குறைந்து ஒரு குறிப்பிட்ட பகுதி பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் கிடைக்கவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்தபகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வருவதாகவும், அதுவும் பத்து நிமிடம் மட்டுமே
வருவதாகவும் அப்படி வரும் தண்ணீரை சுகாதார இல்லாமல் கலங்கலாக சேரும் சகதியமாக வருவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் இன்று காலை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரியமங்கலம் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.