திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கரை ஊராட்சியில் 8 வது வார்டு பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு கேட்டு பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கையை செவி சாய்க்காமல் இருந்ததாக 8வது வார்டு உறுப்பினர் அஞ்சலை தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென இன்று துறையூர் தம்மம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து உப்பிலியபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை விட்டு கலந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.