கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் கட்டிப்பாளையம், மோதுக்காடு , தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது .
இந்த நிலையில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் மண் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்றும்,
தற்போது கோடைகால துவங்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது எனவே உடனடியாக இதுபோன்று குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.