மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 51 பணிகள் 750 கிலோமீட்டர் தூரம் ரூபாய் 8 கோடியே 6 லட்சம் செலவில் தூர் வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மே மாத்தூர் அருகில் உள்ள மஞ்சளாறு பிரிவு வாழ்க்கை வாய்க்கால் தூர் வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி , பூம்புகார் எம்எல்ஏ .நிவேதா எம். முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் நீர்வளத்துறை செயற்பொறியாளர்
சண்முகம் செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன் ஜெயராமன், உதவி பொறியாளர்கள் .விஜயபாஸ்கர் வீரப்பன், தரங்கம்பாடி வட்டாட்சியர் காந்திமதி, செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .விஜயலட்சுமி, மீனா,ஊராட்சி மன்ற தலைவர்கள் தட்சிணாமூர்த்தி
குமார், மற்றும் உழவர் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகள் ,விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.