நாகை மாவட்டம், திருமருகல் கடைத்தெருவில் திராவிட கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யுனிஸ்ட், மமக உள்ளிட்ட கூட்டணி காட்சிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி கூறுகையில் ; திராவிட மாடல் ஆட்சி என்றால்
சமூக நீதி தீண்டாமை ஒழிப்பு என்று பொருள் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாள் என்றும், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாள் என்றும், வள்ளலார் பிறந்தநாளை கருணைநாளாகவும் அறிவித்த திமுக அரசை பாராட்டினார். தற்போதைய திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் திமுகவால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும் என்றும், சாதி ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.