இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி:
இந்தியா ஜனநாயக நாடு, மதச் சார்பற்ற நாடு. ஜனநாயக நாட்டில் யார் எந்த அமைப்பில் வேண்டுமானலும் இருக்கலாம். ஆட்சியாளர்கள் மதம் சார்ந்து இருக்கக் கூடாது. பிரதமர் ஒரு அமைப்பை சார்ந்திருக்கலாம். ஆனால் பிரதமர் அலுவலகம் மதம் சார்பற்ற நிலையில் இருக்க வேண்டும் .
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவில் கோவில்கள் உள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளில் 2000 த்திற்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன.
ஏராளமான கோவில் குடமுழுக்குகளில் அமைச்சர் சேகர்பாபு கலந்துக் கொண்டுள்ளார். ஆனால் இதில் அரசியல் எதுவும் இல்லை.
அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா விரைவில் நடை பெற உள்ளது.
அதனை பாஜக அரசியல் ஆக்க கூடாது.
தமிழகத்தில் மதச் சார்பற்று திமுக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.