தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.47,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,975க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரே விலையில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு ரூ. 1000 குறைந்து ஒரு பவுன் 46,800க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.10 குறைந்து 81.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.