கடந்த சில தினங்களாக ஏறு முகமாக இருந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். தங்கம் நேற்று ஒரு கிராம் 5,835 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,765 ரூபாயாகவும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 46,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, 6,235 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, 49,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
