திருச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் அருண் என்பவர் தனது ஜாதி பெயரில் உள்ள பாடலை பாடி காட்டிய நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரை முருகன் மீது போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதியன்று சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி எஸ்பி வருண்குமாரை விமர்சித்து பேட்டி அளித்தார். இதன் தொடர்ச்சியாக, நாதகவைச் சேர்ந்த மதுரை சமயநல்லூரை அடுத்த ஊமச்சிகுளம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த திருப்பதி (33) என்பவர் திருச்சி எஸ்பி விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருப்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது திருப்பதி திருச்சி தில்லைநகர் போலீசில் தினமும் கையெழுத்திடும் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். திருப்பதி கடந்த சில மாதங்களாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ராம்ஜீ என்பவரிடம் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். ராம்ஜீயின் மனைவி நிவாஷினி திருச்சி துறையூரைச் சேர்ந்தவர் இவர் சென்னையில் வக்கீலாக உள்ளார். இந்நிலையில், கடந்த 03ம் தேதி நிவாஷினி தனது கணவருடன் சென்னையில் இருந்து துறையூர் வந்துள்ளார்.வேலையை முடித்து விட்டு சென்னைக்கு செல்லவேண்டி, துறையூர் பேருந்து நிறுத்தம், அண்ணாசிலை முன்பு கார் வந்து அங்கு வந்த திருப்பதி அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். நிவாஷினி அளித்த புகாரின் பேரில் நாதக பிரமுகர் திருப்பதியை துறையூர் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.