Skip to content
Home » சென்னையில் மழை நீர் வடிகால் பணி…. முதல்வர் இன்று ஆய்வு

சென்னையில் மழை நீர் வடிகால் பணி…. முதல்வர் இன்று ஆய்வு

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னேற்பாடாக மழைநீர் தேங்காமல் இருக்க பல பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.  பாடி, திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள தணிகாச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் நேரு,  சேகர்பாபு, தலைமை செயலாளர்   சிவ்தாஸ் மீனா,  சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தயாநிதி மாறன் எம்.பி ஆகியோரும் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!