மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் டாக்டர் சரவணன். 2019 ம் ஆண்டு மே மாதம் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவருக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பாஜ.வில் சேர்ந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பா.ஜ.வில் இருந்து ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இவர் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு எடப்பாடி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.டாக்டர் சரவணன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.