Skip to content

2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே உள்ள  கெங்கவல்லி  கிருஷ்ணாபுரத்தைசேர்ந்தவர்  அசோக்குமார்(43),  தொழிலாளி.  இவரது மனைவி  தவமணி(38) இவர்களுக்கு அருள் பிரகாஷ்(5), வித்ய தாரணி(13), அருள்குமாரி ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.

தவமணிக்கும், அசோக் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  வழக்கம் போல நேற்று இரவு குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில்,  ஆத்திரம் அடைந்த கணவர் அசோக் குமார், மனைவி  மற்றும்  3 குழந்தைகளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் அருள் பிரகாஷ் (5), வித்ய தாரணி (13) ஆகிய இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து  இறந்தன.

படுகாயம் அடைந்த மனைவி தவமணி, மற்றொரு குழந்தை அருள்குமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கணவன் அசோக் குமாரை ஆத்தூர்  போலீசார் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம ் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

error: Content is protected !!