Skip to content
Home » சேலம்…. அக்கா, தம்பி கொடூர கொலை…. உறவினர் வெறி

சேலம்…. அக்கா, தம்பி கொடூர கொலை…. உறவினர் வெறி

  • by Senthil

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, ஒருவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(40.) இவருக்கு பிளஸ் 2 படிக்கும் நவீனா, 17), என்ற மகளும், 9ம் வகுப்பு படிக்கும் சுகன்( 14,) என்ற மகனும் உள்ளனா். இவரது வீட்டின் அருகில், ராஜாவின் ஒன்று விட்ட சகோதரர் தனசேகரன் வீடும் உள்ளது. இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை, 6.45 மணிக்கு தன் வீட்டின் அருகில் உள்ள காட்டில் அரளி பூ பறிக்கும் பணியில், நவீனா மற்றும் சுகன் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருவரின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த ராஜா அங்கு ஓடி வந்தார்.அப்போது அங்கிருந்த தனசேகரன், கட்டையால் ராஜாவின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, நவீனா, சுகன் இருவரும் கழுத்தறுக்கப்பட்டு பூச்செடிகளுக்கு நடுவே  இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் குறித்து  தகவல் அறிந்த டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., கவுதம் கோயல் மற்றும் பனமரத்துப்பட்டி போலீசார்  சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இருவரது உடலையும் மீட்டு, பனமரத்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி  தனசேகரனை கைது செய்தனர். இந்த இரட்டை கொலையில்வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!