நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது காரம்பாடு என்ற கிராமம். இங்கு, கோவில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவரும் குத்திக் கொலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவில் விழாவில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
